குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பு நடத்திய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் டிச.9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிச.18ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் முதல்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் வியாழக்கிழமை (இன்று) மாலையுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், இந்தியா டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி 106 முதல் 116 இடங்கள் வரையிலும், காங்கிரஸ் கட்சி 63 முதல் 73 இடங்கள் வரையிலும், பிற கட்சிகள் 2 முதல் 4 இடங்கள் வரையிலும் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 111 இடங்களிலும், காங்கிரஸ் 68 இடங்களிலும் வெற்றிபெறும் என்றும், ஏபிபி-சிஎஸ்டிஎஸ் நடத்திய கருத்து கணிப்பில் பாஜக 91 முதல் 99 இடங்களிலும், காங்கிரஸ் 78 முதல் 86 இடங்களிலும், மற்றவைகள் 3 முதல் 7 இடங்கள் வரையிலும் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஃபேஸ்புக்குக்கு அடிமையானவரா நீங்கள் ? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்