குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு பிரதமர் மோடியின் வருகைதான் காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி, வியாழக்கிழமை (நேற்று) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மொத்தம் 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல், நவம்பர் மாதம் 9ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றார். மேலும் அவர், இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

அதே நேரத்தில், குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை அவர் அறிவிக்கவில்லை. ஒரே நேரத்தில் நடைபெற வேண்டிய இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் தொடர்பான தேதிகளில் குஜராத் தேர்தல் தேதியை மட்டும் தேர்தல் ஆணையம் அறிவிக்காதது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தம் காரணமாகவே தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அடுத்த வாரம் குஜராத் மாநிலம் காந்திநகரில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெறவுள்ள மிகப் பெரிய பேரணியில், பிரதமர் மோடி கலந்துகொண்டு புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளதால் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.

நன்றி : NDTV

இதையும் படியுங்கள்: குஜராத்தில் பாஜக கவுன்சிலரை மரத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்: வைரலாகும் வீடியோ

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்