குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு நடைபெறவுள்ள முதல்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வியாழக்கிழமையுடன் (இன்று) ஓய்வடைகிறது.

மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் டிச.9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிச.18ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்: ஃபேஸ்புக்குக்கு அடிமையானவரா நீங்கள் ? இதைப் பாருங்கள்

89 தொகுதிகளில் நடைபெறவுள்ள முதல்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் வியாழக்கிழமை (இன்று) மாலையுடன் ஓய்வடைகிறது. இதனையொட்டி பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஜிஎஸ்டி விவகாரத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்த தொழில்நகரமான சூரத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இதையும் படியுங்கள்: குஜராத் தேர்தல்: முஸ்லிம்களின் நிலை என்ன?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்