குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பு நடத்திய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை (டிச.9) மற்றும் வியாழக்கிழமை (இன்று) என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பு நடத்திய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதில், சி-வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் பாஜக 108 இடங்களிலும், காங்கிரஸ் 74 இடங்களிலும் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, சிஎன்என்-நியூஸ் 18 நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 125 இடங்களிலும், காங்கிரஸ் 57 இடங்களிலும் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ்-விஎம்ஆர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 109 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும் வெற்றிபெறும் என்றும், ஏபிபி-சிஎஸ்டிஎஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 91 முதல் 99 இடங்கள் வரையிலும், காங்கிரஸ் 78 முதல் 86 இடங்கள் வரையிலும் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஃபேஸ்புக்குக்கு அடிமையானவரா நீங்கள் ? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்