குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு எதிராக புகார் கூறி ஐ.பி.எஸ் பணியில் இருந்து நீக்கப்பட்ட சஞ்சீவ்பட்டுக்கு ஆயுள் தண்டனை

He had detained around 150 people during a communal riot in Jamjodhpur town, at the time of a rath yatra, being carried out by LK Advani.

0
534

The case dates back to 1990 when Bhatt was posted as the additional superintendent of police in Jamnagar. He had detained around 150 people during a communal riot in Jamjodhpur town, at the time of a rath yatra, being carried out by LK Advani.


குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்துக்கு அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோடி சதித் திட்டம் தீட்டியதாகவும், அந்தக் கூட்டத்தில் தான் கலந்துகொண்டதாகவும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சஞ்சீவ் பட்.

இவர், அனுமதியின்றி விடுப்பு எடுத்தார் , அலுவலக வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தினார் என்று காரணங்கள் கூறி  2011-ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த 2015-ஆம் ஆண்டில் பணிநீக்கம் செய்யப்பட்டார். 

ஆனால், அதன் பின்னரும்கூட  சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பாஜகவையும் மோடியையும் விமர்சித்து வந்தார்.

1990 களில் ஜான்நகர் கூடுதல் சூப்பிரண்டாக சஞ்சீவ் பட் பணியாற்றினார். அத்வானி முன்னின்று நடத்திய ரத யாத்திரையின்போது  ஜாம்ஜோத்பூர் நகரில் மதக்கலவரங்களில் ஈடுபட்டதாக கூறி 150 பேரைக் கைது செய்தார் சஞ்சீவ் பட். 

150 பேரில் கைதான  பிரபுதாஸ் வைஷ்னானி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மருத்துவமனையில்  உயிரிழந்தார் . சிறையில் சித்தரவதை செய்ததால் தான் அவர் இறந்தார் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சஞ்சீவ் பட் உட்பட 8 போலீஸார்  மீதும் வழக்கு பதியப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை ஜாம்நகர் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், சஞ்சீவ் பட் , பிரவின்சின் சாலா , மற்றும் ஒரு போலீசுக்கு  ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 

30 ஆண்டுகளுக்கு முன் ஜான்நகர் கூடுதல் சூப்பிரண்டாக சஞ்சீவ் பட் பணியாற்றிய போது, ஒரு கைதி மரணமடைந்தது தொடர்பாக அவர் மீது நிலுவையில் இருந்த வழக்கு தூசிதட்டப்பட்டு கடந்தாண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

வழக்குரைஞர் ஒருவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ய போதைப் பொருள் பொட்டலத்தை, பனாஸ்கந்தா காவல்துறையே வைத்தது என்ற வழக்கில் ஐபிஎஸ் சஞ்சீவ் பட் குஜராத் சிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு  சிறையில் இருக்கிறார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here