குஜராத் கலவரம்; மோடியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு; இந்த மனுவைத் தவிர எங்களை எதிர்த்து யாரும் எதுவும் சொல்லவில்லை – உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழு

0
375

குஜராத் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்தியாவின் தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடி உட்பட 64 பேர் மீது குற்றம் இல்லை என்று கூறி, சிறப்பு விசாரணைக் குழு அவர்களை விசாரணையிலிருந்து விடுவித்தது. 

இதை எதிர்த்து முன்னாள் எம்.பி. ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, அகமதாபாத் நகரில் உள்ள குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் இஹ்சான் ஜஃப்ரி உட்பட 68 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் குற்றம்சாட்டப்பட்ட நரேந்திர மோடி உட்பட 63 பேர் மீதான குற்றச்சாட்டிற்கு எந்த ஆதரமும் இல்லை என்று கூறி 2012 ஆம் ஆண்டு சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்தது. இதை எதிர்த்து ஜாகியா ஜஃப்ரி தாக்கல் செய்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது . 

சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரி அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், குஜராத் உயர் நீதிமன்றத்திலும் ஜாகியா ஜாஃப்ரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஜாகியா ஜாஃப்ரி, சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாத் ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, சிடி ரவிகுமார் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் மனுதாரர் ஜாகியா ஜாஃப்ரி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடி வருகிறார். 2018-ம் ஆண்டு இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் கான்வில்கர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. சிறப்பு விசாரணைக் குழுவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகல் ரோஹத்கி ஆஜராகி வாதாடினார்.

எஸ்ஐடி சார்பில் மூத்த வழக்கறிஞர் முகல் ரோஹத்கி வாதிடும் போது , ‘விசாரணை நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழிமொழிய வேண்டும். இல்லாவிட்டால் ஜாஃப்ரியின் மனுவுக்கு முடிவில்லாமல் போய்விடும். சில சமூக ஆர்வலர்கள் சில காரணங்களுக்காக மனு செய்வார்கள்’ இந்த மனுவைத் தவிர யாரும் எங்களை எதிர்த்து எதுவும் சொல்லவில்லை என்று சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதுஎனத் தெரிவித்தார்.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிடுகையில், ‘சிலர் மீது சாயம் பூசி அவர் செய்த பணிகளை மறைக்கப் பார்க்கிறார்கள். குஜராத்துக்கு எதிரானவர் என முத்திரை குத்துகிறார்கள். இது நியாயமற்றது.

இந்த நீதிமன்றத்தின் வரலாற்றில் குறைவான முறை, தருணங்கள் மட்டுமே உங்கள் முன் உள்ளன. இதற்கு முன் பலமுறை இது நடந்துள்ளது. சட்டம் சோதனைக்குள்ளானது. நான் யாரையும் குறிவைக்கவில்லை. நீதிபதிகளுக்குத் தெரியும், கிரிமினல் சட்டப்படி, குற்றங்களைத்தான் அறிய முடியுமே தவிர குற்றவாளிகளைக் கருத்தில் கொள்ளமாட்டோம்.

சிறப்பு விசாரணைக் குழு குற்றம் செய்தவர்களைக் கண்டறிய வேண்டும். அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். யாருமே செய்யவில்லை, யாரும் இல்லாமல் இவை நடந்தது என்றால், எப்படி வழக்காக உங்கள் முன் வந்தது? குற்றம் நடந்தது என்பதை நீங்கள் உணர்ந்தால், இந்த விசாரணைக்கு உரிய பொறுப்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here