குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் என மாணவர்கள் படித்து வந்தனர். ஆனால் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு, (National Council of Educational Research and Training – NCERT) இந்த வரலாற்றைக் திரிக்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதியன்று, கோத்ரா ரயில் நிலையத்தில் நின்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் 58 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இதனை முஸ்லிம்கள்தான் செய்தார்கள் என பரவிய தகவலை அடுத்து, குஜராத் மாநிலம் முழுவதும் பயங்கர கலவரம் வெடித்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்.

இந்தக் கலவரம் பள்ளி பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றது. முன்னதாக 12ஆம் வகுப்பு பொலிட்டிகல் சயின்ஸ் பாடப்புத்தகத்தில், இந்தக் கலவரத்தினை முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் என இதுநாள் வரை மாணவர்கள் படித்து வந்தனர். ஆனால் தற்போது இதில் ’முஸ்லிம்களுக்கெதிரான’ என்ற வார்த்தையை நீக்கி விட்டு ’குஜராத் கலவரம்’ என என்.சி.இ.ஆர்.டி குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: the indian express

இதையும் படியுங்கள்: ”ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here