குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை (பிப்.17) அன்று, குஜராத் மாநிலத்தில் 28 மாவட்டங்களுக்குட்பட்ட 75 நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் திங்கட்கிழமை (இன்று) எண்ணப்பட்டு, அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

vote

இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து அம்மாநில தேர்தல் ஆணையர் வரேஷ் சின்ஹா, பாஜக 47 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், பகுஜன் சமாஜ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஆறு இடங்களில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 59 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. அதேபோன்று, சமீபத்தில் நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்ரிபெற்றிருந்தது.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here