குஜராத் மாநில அரசு தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை பில்கிஸ் பானு குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள் : ‘தமிழகத்தில் கியா நிறுவனம் தொழில் தொடங்காதது ஏன்?’

கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக மிகப் பெரிய வன்முறை அரங்கேறியது. இந்தக் கலவரத்தின்போது, ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு (19) பத்துக்கும் மேற்பட்ட இந்துத்துவா கும்பலால் கற்பழிக்கப்பட்டார். பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை இந்துத்துவா கும்பல் கொடூரமாகக் கொலை செய்தது. பில்கிஸ் பானுவின் மூன்றரை வயது பெண் குழந்தையையும் அந்தக் கும்பல் கொலை செய்தது. இது தொடரபான வழக்கு 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : இளம் வயதிலிருந்தே நான் அவங்க ஃபேன்’ – ரஹ்மானின் மனம் கவர்ந்த அந்த நடிகை யார்?

இது தொடர்பாக பேசிய பில்கிஸ் பானுவின் கணவர் யாகூப், “நாங்கள் நீதிமன்றம் செல்வதற்கு முன்னால், எங்களுக்கு மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார். இந்த வழக்கிற்காக 15 ஆண்டுகளாக கடும் போராட்டங்களைச் சந்தித்ததாகவும், தங்களுக்கு குஜராத் மாநில அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் பில்கிஸ் பானு தெரிவித்துள்ளார். வழக்கு நடைபெற்ற காலங்களில், தாங்கள் அடிக்கடி தங்களின் குடியிருப்பை மாற்றி வந்ததாகவும், தங்கள் குழந்தைகளின் கல்வியைப் பற்றி கவலைப்படுவதாகவும் பில்கிஸ் பானு தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : பில்கிஸ் பானுவின் 15 ஆண்டு கால போராட்டம்; முழு பின்னணி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்