2016-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 5 நாட்களில் குஜராத்தின் 11 வங்கிகளில் பாஜகவினர் ரூ.3118 கோடி செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை டெபாசிட் செய்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்கள், கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் உள்ள வங்கிகளில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில்தான் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று காங்கிரஸ்கட்சி தெரிவித்துள்ளது. அதனைப்பற்றிய விளக்கங்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மனோரஞ்சன் ராய் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வங்கிகளில் பெறப்பட்ட ரூபாய் விவரங்கள் குறித்த தகவல்களைக் கேட்டிருந்தார். அவருக்கு நபார்டு வங்கியின் தலைமை பொதுமேலாளர் எஸ் சரவணவேல் பதில் அளித்துள்ளார்.

2016, நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார் . அதனால் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன.

அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 2016, நவம்பர் 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதிவரை செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மட்டும் ரூ.745.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. பாஜக தலைவர் அமித் ஷா இயக்குநராக இருக்கும் கூட்டுறவு வங்கிதான் இந்தியாவிலேயே அதிக நோட்டுகளை மாற்றியது .

நவம்பர் 14-ஆம் தேதிக்குப் பிறகு கூட்டுறவு வங்கியில் யாரும் பணம் கொடுத்து மாற்றக்கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா –

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் நாட்டிலேயே மிகப்பெரிய ஊழலாகும். இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏராளமான கறுப்புப்பணம் பாஜகவினரால் வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்கள், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் செல்லாத ரூ.500, ரூ1000 நோட்டுகள் ஏராளமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளோம்.

பாஜக தலைவர் அமித் ஷா இயக்குநராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு 5 நாட்களில் ரூ.745.58 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு 5 நாட்களில் குஜராத்தில் மட்டும் 11 கூட்டுறவு வங்கிகளில் ரூ.3118.51 கோடி செல்லாத ரூ.500, ரூ1000 நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்த 5 நாட்களில் கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் ரூ.22,270 கோடி செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது.

இதில் பாஜக ஆளும் மாநிலங்கள், கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்கள், ஆதரவு பெற்ற மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் அந்த 5 நாட்களில் ஒட்டுமொத்தமாக ரூ.14,293.71 கோடி செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பாஜக ஆட்சியில் இருந்த மாநிலங்கள், கூட்டணியில் இருந்த மாநிலங்கள், ஆதரவு பெற்ற மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பாஜக ஆட்சியில் இருந்த மாநிலங்கள், கூட்டணியில் இருந்த மாநிலங்கள், ஆதரவு பெற்ற மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம்

பாஜக ஆட்சியில் இல்லாத பிற மாநிலங்களில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளில் ரூ.7,911 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது .

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட்டுறவு வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட் செய்யப்பட்ட பணம்
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட்டுறவு வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட் செய்யப்பட்ட பணம்

பெரும்பாலான பணம் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் பாஜகவினரால் கட்டுப்படுத்தப்பட்டு தலைவர்களாக, இயக்குநர்களாக இருக்கும் அமைப்பாகும். இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படுவது மிகவும் அவசியமாகும்.

குஜராத்தில் 11 கூட்டுறவு வங்கிகளில் 5 நாட்களில் ரூ.3,118 கோடி செல்லாத நோட்டு எப்படி டெபாசிட் செய்யப்பட்டது என்பதை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் விளக்க வேண்டும் என்றும் கூறினார்.

Screen Shot 2018-06-22 at 6.03.46 PM

Screen Shot 2018-06-22 at 6.04.00 PM

Courtesy : India Today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here