குஜராத் மாநிலத்தில் கல்லூரி விடுதியில் பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட அவமரியாதை செயல் தொடர்பாக கல்லூரி முதல்வர் உட்பட மூவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

குஜராத் மாநிலம் புஜ் மாவட்டத்தில் ஸ்ரீ சஹஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் கல்லூரியில் பயிலும் பெண்கள் தங்கியிருக்கின்றனர். அந்த விடுதியில் சமீபத்தில் பெண்கள் யார் மாதவிடாய் காலத்தில் இருக்கிறார்கள் என்பது குறித்து எழுந்த விவகாரம் ஒன்றில், அங்கு தங்கியிருக்கும் 68 பெண்களுக்கும் அவர்களது உள்ளாடைகளை நீக்கி சோதனைநடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து  இதுதொடர்பாக மாணவியர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் கல்லுரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவர் கூறுகையில், ‘நாங்கள் எங்களது கல்வி நிறுவனத்தை மதிக்கிறோம். ஆனால் அவர்கள் நடந்து கண்ட விதம் சரியானதல்ல. அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் போதிய கவனம் பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இதை ஊடக கவனத்திற்கு கொண்டு வந்தோம். கல்லூரி முதலவர் மற்றும் வேறு சிலர் எங்களை மிரட்டினார்கள். அன்று எதுவும் நடைபெறவில்லை என்று எழுதிக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்’ என்று தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளித்த கல்லூரி முதல்வர் தர்ஷனா தோலகியா, ‘இந்த சம்பவம் விடுதி தொடர்பானது. கல்லூரியில் எதுவும் நடைபெறவில்லை. அந்த பெண்களின் சம்மதம் இல்லாமல் எதுவும் நடைபெறவில்லை; யாரும் அவர்களைத் தொடவும் இல்லை. நடந்த சம்பவங்கள் குறித்து தீர விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.   

இந்நிலையில் இந்த விஹாரம் தொடர்பாக தொடர்பாக கல்லூரி முதல்வர் உட்பட மூவர் மீது காவல்துறை திங்களன்று  வழக்குப்பதிவு செய்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here