குஜராத் மாநிலம் வதோரா பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் கவுன்சிலரை, அப்பகுதி பொதுக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் வதோதராவின் பபோத் பகுதியின், மாநகராட்சி கவுன்சிலராக ஹஸ்முக் படேல் என்பவர் உள்ளார். இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள குடிசைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் இடித்துத் தள்ளினர். மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து முன் கூட்டியே நோட்டீஸ் ஏதும் அனுப்பாமல் எப்படி நடவடிக்கை எடுக்கலாம் என கூறி பாஜக கவுன்சிலர் ஹஸ்முக் படேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில், இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ஹஸ்முக் படேலை மரத்தில் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய ஹஸ்முக் படேல், தனது டிரைவருடன் வரும்போது அவரை பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு தாக்கியதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜக கவுன்சிலரைக் கட்டி வைத்து அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Source: Scroll.in

இதையும் படியுங்கள்: சீமான்… அரசியல்தான் அப்டீன்னா சினிமாவுலயுமா…?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்