கீழக்கரை வரலாறு நூலின் அட்டை.

இறைநேசர்கள் நடந்த நிலம் இது. இறைவனுக்கு அடிபணிந்த செய்யிது ஆசியா உம்மாவின் நெற்றித் தடம் பதிந்த கடற்கரை மணல் இது. பல்லாக்கு அவுலியா நடந்து சென்ற கடல் நீர் இது. ஆண்டவனுக்காக உருகிப் பாடிய பாடல்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மண் இது. அறிவே விடுதலை என்பதை உணர்ந்த மக்கள் இவர்கள். கடலைக் கடந்து பன்னாட்டுப் பண்பாடுகளை ஆரத்தழுவும் மனம் கொண்டவர்கள் இந்த மக்கள். இதுதான் கீழக்கரை. இந்தக் கீழக்கரைக்குத் தனித்துவமான வரலாறு இருக்கிறது. ஆன்மிகத் தலைநகராக, வர்த்தகத் தலைநகராக இருந்த வரலாறு இது. இந்த ஊரின் சரித்திரத்தை 1986இல் எம்.இத்ரீஸ் மரைக்காயர் “கீர்த்திமிகும் கீழக்கரை” என்ற புத்தகமாக எழுதினார். மிகச்சரியாக முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் எஸ்.மஹ்மூதுநெய்னா “கீழக்கரை வரலாறு” நூலை எழுதியுள்ளார்.

கீழக்கரை துறைமுக நகரம். உலகிற்கு நமது ஜன்னலாகவும் நம்மைப் பற்றி உலக மக்கள் உணர்ந்துகொள்ள உதவும் வாசலாகவும் வாழும் ஊர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கிறது. கடல் வணிகத்தில் கோலோச்சிய ஊர். கடல் வணிகத் தொடர்பால் இஸ்லாம் அறிமுகமாவதற்கான ஆன்மிக வாசலாகவும் இந்த ஊர் அமைந்தது. இந்து மதமும் இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஏக காலத்தில் வளர்ந்த ஊர் இது. செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதியின் ஊர். கடலோடி திரவியம் தேடுவதற்கு வழிகாட்டிய வணிகத் தளம். ஆன்மிக அருள் கொழிக்கும் பூமி. ஐரோப்பிய ஆவணங்கள் வழியாகவும் தமிழ் மரபு சார்ந்த தொன்மையான ஆதாரங்களின் வெளிச்சத்திலும் இந்த ஊரின் கதையைச் சொல்கிறார் ஜனரஞ்சக வரலாற்று ஆசிரியர் நெய்னா. உலக அளவில் இஸ்லாமிய வாழ்வியல் நெறிக்கான பன்முகப் பண்பாட்டுத் தலங்களைப் பற்றிப் பேசும்போது, அதில் கீழக்கரையும் இடம்பெறும். இறைநேசர்களான சதக்கத்துல்லா அப்பாவும் செய்யிது ஆசியா உம்மாவும் கடல் வணிகத்தில் ஆளுமை செலுத்திய வள்ளல் சீதக்காதியும் தமிழ் மரபுடன் இரண்டறக் கலந்தவர்கள்.

இப்போது ஊடகக் குழுமமும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

நூலின் பெயர்: கீழக்கரை வரலாறு

ஆசிரியர்: எஸ். மஹ்மூது நெய்னா

வெளியீடு: இப்போது மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

பக்கங்கள்: 336 விலை: ரூ.300

ஆன்லைனில் வாங்க இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலுள்ள நீல பட்டனை அழுத்துங்கள்: https://rzp.io/l/Kilakarai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here