கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம்… முதல்நாள் ஆந்திரா, தெலுங்கானா வசூல் நிலவரம்

0
336

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் படமாக எடுத்தனர். சாவித்ரியின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். சமந்தா, துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தெலுங்கில் மகாநதியாக 9 ஆம் தேதி வெளியான படம், தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் இன்று வெளியாகியுள்ளது.

படத்தைப் பார்த்தவர்கள் கீர்த்தி சுரேஷையும், இயக்குநர் நாக் அஸ்வினையும் புகழந்து பாராட்டி வருகின்றனர். மகாநதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. முதல்நாளில் இந்தப் படம் இவ்விரு மாநிலங்களில் சுமார் 1.45 கோடியை விநியோகஸ்தர் ஷேராக மட்டும் வசூலித்துள்ளது.

படத்துக்கு கிடைத்துவரும் நேர்மறை விமர்சனங்களால் படம் சூப்பர் ஹிட்டாகும் என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்