கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இதனால், மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதி இருந்தது. ஆனால், கிராமப்புற மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத நிலையில் இருந்தனர். இதனால், நாடு முழுவதும் மாதந்தோறும் பல கோடி ரூபாய் வீணாகி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Want to exchange torn currency notes? Check out the process, rules of RBI
Also Read 👇
.இந்நிலையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அவற்றின் கிளை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் வங்கிகள், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை பின்பற்ற முடியாமல் போனது.

You can exchange Mutilated notes received from atm, sbi tells how? | ATM से  निकल आएं कटे-फटे नोट तो क्या करें, SBI ने बताया- इस तरह से कर सकते हैं  एक्सचेंज |இதனால், கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ‘இனிமேல் பொதுமக்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கிகளிலும் மாற்றி கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் அறிக்கை அனுப்பி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களுக்கு கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், போதுமான அளவு சில்லறை நாணயங்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here