கேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழ், தெலுங்கு, இந்தி நட்சத்திரங்கள் உதவிய அளவுக்கு கேரளாவின் முன்னணி நடிகர்கள் நிதியுதவி அளிக்கவில்லை என்ற சர்ச்சை ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. மீடியா, மக்களைத் தொடர்ந்து திரையுலகுக்கு உள்ளேயே இந்தக் குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. பழம்பெரும் நடிகை ஷீலா முன்னணி நடிகர்களை விளாசியுள்ளார்.

“கேரளத்தின் முன்னணி நடிகர்கள் பயன்படுத்தும் கார்களின் விலையே 4 கோடி. கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள். கேரள அரசு ஊழியர்கள் வெள்ள நிவாரணத்துக்காக ஒருமாத சம்பளத்தை தரும்போது, நடிகர்கள் தங்களின் ஒரு படத்தின் சம்பளத்தையாவது தர வேண்டாமா? உங்களுக்கு பெயர், புகழ், பணம் அனைத்தையும் தந்த மக்கள் இப்போது வீடில்லாமல் அனைத்தும் இழந்து தெருவில் நிற்கிறார்கள். அவர்களுக்கு அதிக நிதி கொடுத்து அவர்கள் பக்கம் நிற்பதுதானே நியாயம்” என்று ஷீலா கேட்டுள்ளார்.

நியாயம்தானே.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்