அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா, கிறிஸ்துமஸை முன்னிட்டு சாண்டா கிலாஸாக வேடமணிந்து குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

சாண்டா தொப்பி அணிந்து பை நிறைய பரிசு பொருட்களை கொண்டு தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்ற ஒபாமாவை பார்த்து அந்த மருத்துமனையில் இருந்த குழந்தைகள் சந்தோசத்தில் துள்ளி குதித்தனர்.

ஒபாமாவை உற்சாகத்துடன் வரவேற்ற அந்த மருத்துவமனை பணியாளர்களுக்கு தன் நன்றியை ஒபாமா தெரிவித்து கொண்டார்.
ஒபாமா கிறிஸ்துமஸ் தாத்தாவாக வலம் வரும் வீடியோவை தேசிய குழந்தைகள் மருத்துவமனை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர்.

“இரு பெண் பிள்ளைகளின் தந்தையான நான், அந்த தருணத்தில் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் செவிலியர்,பணியாளர்கள்,மருத்துவர்களின் பணி மிக முக்கியமானது. அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் ஒபாமா.

அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியான ஒபாமா, இப்பொழுது வாஷிங்டன்னில் வசிக்கிறார். சென்ற வருடம் இதை போல் கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடம் அணிந்து மிடில் ஸ்கூல் மாணவர்களை மகிழ்வித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here