Dimple Kapadia

பாலிவுட்டின் முன்னாள் கனவுக்கன்னி என்பதே சரி. டிம்பிள் கபாடியாவை எப்படி இந்நாள் கனவுக்கன்னி என்று சொல்ல முடியும்?

இந்திப்பட நடிகர்கள் இர்பான் கான், நஸ்ருதின் ஷா, ப்ரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் போன்று பலர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். ஆனால், கிறிஸ்டோபர் நோலனின் படத்தில் நடிப்பது கூடுதல் கௌரவம். அது முன்னாள் கனவுக்கன்னி டிம்பிள் கபாடியாவுக்கு கிடைத்திருக்கிறது. 

நோலனின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் டன்கிர்க். இதையடுத்து டெனெட் (Tenet) என்ற படத்தை நோலன் இயக்குகிறார். இதில் முக்கியமான வேடத்தில் நடிக்க டிம்பிள் கபாடியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படத்தில் ராபர்ட் பேட்டின்ஷன், மைக்கேல் கேய்ன், ஜான் டேவிட் வாஷிங்டன் ஆகியோரும் நடிக்கின்றனர். 2020 ஜுலை 17 படம் திரைக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here