கிரே பட்டியலில் தொடரும் பாகிஸ்தான்?

Pakistan was placed on the grey list by the Paris-based watchdog in June 2018 and was given a plan of action to complete it by October 2019, or face the risk of being blacklisted.

0
218

பாரிஸ் நகரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் எஃப்ஏடிஎஃப் (FATF) என்ற அமைப்பானது, சர்வதேச அளவில் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செல்கிறதா என்பதை கண்காணிக்கும் அமைப்பாகும். தீவிரவாத நிதியுதவியை கட்டுப்படுத்த தவறும் நாடுகள், பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப கிரே பட்டியலிலும், கறுப்பு பட்டியலிலும் சேர்க்கப்படுகின்றன.

இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் நிதி உதவி அளித்து வருவதை அடுத்து எப்.ஏ.டி.எப். எனப்படும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான அமைப்பு பாகிஸ்தானை ‘கிரே’ பட்டியலில் வைத்து கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனால் சர்வதேச நிதியம் உலக வங்கி ஆகியவற்றில் இருந்து பாக். நிதி உதவி பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில் லஷ்கர் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஹபிஸ் சயீத்துக்கு இரு வழக்குகளில் ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து பாகிஸ்தான் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து கிரே பட்டியலில் இருந்து நீக்கப்படுவோம் என பாகிஸ்தான் எதிர்பார்த்து வருகிறது.

இந்நிலையில் எப்.ஏ.டி.எப். அமைப்பின் கூட்டம் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன் தினம்(பிப்.,16)துவங்கி பிப்.,21 வரை நடைபெறுகிறது. எப்.ஏ.டி.எப். விதித்த 27 நிபந்தனைகளில் 14 நிபந்தனைகளை மட்டுமே பாகிஸ்தான் நிறைவேற்றி உள்ளதால் அது கிரே பட்டியலில் தொடர்வதையே பல நாடுகளும் வலியுறுத்தும் என நிபுணர்கள் கருத்து தெரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here