ஆவணி மாத சுக்ல பட்ச அஷ்டமியில் கிருஷ்ணர் அவதரித்தார். தாயும் தந்தையும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். அப்போது குழந்தையானது, ஸ்ரீமகாவிஷ்ணுவாக விஸ்வரூபம் எடுத்து காட்சி தர, வியந்து போனார்கள். இது வரம். ஏற்கெனவே வாங்கி வந்த வரம்.

இது நிகழ்ந்த நன்னாள்தான் ஆவணி சுக்லபட்ச அஷ்டமித் திருநாள். கிருஷ்ண ஜெயந்தி எனும் புனித நன்னாள். இந்த நாளில், வீட்டு வாசலில் இருந்து வீட்டுப் பூஜையறைக்குள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, குழந்தையாகவே பாவித்து நாம் வரவேற்று பூஜிப்பது வழக்கம்.

இந்த கோகுலாஷ்டமி தினத்தில் அரிசிமாவில் மாக்கோலமிட்டு கிருஷ்ணர் பாதம் வரைந்து குதூகலிப்போம். மாலை வரை விரதமிருப்போம். இதனால், கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.

அன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவு அளிக்க வேண்டும்.  அதன் பிறகு கிருஷ்ணருக்குப் பிடித்த உப்பு சீடை, வெல்ல சீடை, தேன்குழல், தட்டை, அதிரசம், கைமுறுக்கு, அப்பம் வெண்ணெய், அவல், பால், கற்கண்டு முதலான பட்சணங்களை நைவேத்தியம் செய்து பூஜிப்போம்.

ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரகோலம், மலர் அலங்காரம், பூக்கோலம் போடுவார்கள். 

இன் நன்நாளில் துவாதச மந்திரமான 

‘ஓம்நமோபகவதேவாசுதேவாய’ 

என்னும்மந்திரத்தை 108 முறைஜெபித்து, மலர்களைஅவரதுபடத்திற்குதூவவேண்டும். 

தூபதீபம்காட்டவேண்டும். பாகவதத்தில்கண்ணனின்பிறப்பைவிவரிக்கும்தசமஸ்கந்தம்எனப்படும்பத்தாவதுஅத்தியாயத்தைஒருவர்படிக்க, குடும்பத்தில்மற்றவர்கள்கேட்கவேண்டும். 

சிறுவர், சிறுமிகள்கோலாட்டம்ஆடுவர். கிருஷ்ணன்கோவில்களில்உறியடித்தல், வழுக்குமரம்ஏறுதல்போன்றவிளையாட்டுகள்நடக்கும்.