சிரியாவில் நடைபெற்றும் உள்நாட்டுப் போர் காரணமாக, அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் அகதிகளாக அருகில் உள்ள நாடுகளில் தஞ்சம் அடைந்துவருகின்றனர். அகதிகளாக செல்லும் பலர் பாதுகாப்பற்ற கடல் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

சிரியாவைச் சேர்ந்த சிலர், அகதிகளாக இரண்டு படகுகளில் கிரீஸ் நாட்டிற்கு பாதுகாப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்டனர். அப்போது ஃபார்மகோன்ஸி மற்றும் கலோலிம்னோஸ் கடற்பகுதியில், அகதிகள் சென்ற படகுகள் கடலில் திடீரென நீரில் மூழ்கி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் 20 குழந்தைகள் உட்பட 44 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற கிரீஸ் கடலோர காவல் படையினர், உயிரிழந்தவர்களின் சடலங்களையும், விபத்தில் சிக்கிய 74 பேரையும் மீட்டனர். மேலும் காணாமல் போன பத்துக்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்