கிரீன்லாந்தில் ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 100 கோடி டன் பனி உருகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் காரணமாக பனி உருகுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில்,கிரீன்லாந்து நாட்டில், கோடைக்காலத்தின்போது வழக்கமாக 50 சதவீத பனி உருகுவது வழக்கம். பின்னர் தொடர்ந்து வரும் குளிர்காலத்தில் மீண்டும் ‌பனி உறைந்து விடுவதுண்டு. ஆனால் தற்சமயம் கிரீன்லாந்தில் 24 மணி நேரத்தில் ஆயிரத்து 100 கோடி டன் பனி உருகி கடல் நீர்மட்டத்தை அதிகரிக்க செய்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாசா ”கிரீன்லாந்தின் பனிப்பாறைகள் ஒரு “பெரிய பனி உருகும் நிகழ்வுக்கு” ஆளாகியுள்ளன. பில்லியன் டன்களில் உருகும் நீர் அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்து கடலின் நீர்மட்டம் உயர்கிறது.

புளோரிடா மாநிலம் முழுவதையும் கிட்டத்தட்ட ஐந்து அங்குல நீரில் மூடுவதற்கு இந்த நீர் போதுமானது. அதிக வெப்பத்தின் காரணமாகவே இந்த முறை அதிக அளவிலான பனிக்கட்டிகள் உருகியுள்ளன. உலக வெப்பமயமாதல் போன்ற வானிலையை பாதிக்கும் காரணங்களால் எதிர்காலத்தில் இன்னும் மோசமான நிலைமையை சந்திக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here