நாட்டிலேயே அதிக கிரிமினல் வழக்குகளைக் கொண்ட முதல்வராக மகாராட்ஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இருப்பதாக, ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாநிலங்களின் தேர்தல்களின்போதும், போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களது சொத்து விபரங்கள், வழக்குப் பின்னணிகள் குறித்து ஆய்வு செய்து அதற்கான அறிக்கைகளை ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவிலுள்ள மாநில முதல்வர்களின் மீதுள்ள வழக்குகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மீது 22 கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. அவரைத்தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது 11 வழக்குகளும், டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் மீது 10 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் மீது எட்டு வழக்குகளும், பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் மீது எட்டு வழக்குகளும், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது நான்கு வழக்குகளும், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது மூன்று வழக்குகளும், தெலுங்கான மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி மீது தலா இரண்டு வழக்குகளும், ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹ்பூபா முஃப்தி மற்றும் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் மீது தலா ஒரு வழக்கும் பதிவாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்