கிராமப்புறங்களில் மக்களின் வாங்கும் சக்தி கடுமையாக குறைந்துள்ளது -நீல்சன் ஆய்வில் தகவல்

0
166

பா.ஜ.கவின் தவறான பொருளாதார கொள்கைகளான பணமதிப்பிழப்பு , முறையாக செயல்படுத்தப்படாத  ஜி.எஸ்.டி போன்றவற்றால் இந்திய பொருளாதாரம் படிப்படியாகச் சரிந்து வருகிறது. 

சிறு மற்றும் குறு தொழில்கள் முற்றிலும் முடங்கி இழுத்து மூடப்படும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தங்களின் நுகர்வுகளை வெகுவாக குறைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது உலகின் மூன்றில் ஒரு பங்கு நுகர்வோர் இருக்கும் இந்தியாவில் இருக்கும் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. 

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான ‘நீல்சன்’ (Nielsen) ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டு நுகர்வு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, அதனடிப்படையிலான அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.

 வட இந்தியாவை இந்திய பொருளாதார வீழ்ச்சி மிக கடுமையாக பாதித்துள்ளது என்றும் தனால் கடுமையான வேலையிழப்புகள் உருவாகியுள்ளது என்றும் நீல்சன்  ஆய்வில் தெரியவந்துள்ளது .  

அதில், இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு, கிராமப்புற நுகர்வு அதிவேகமாக சரிந்திருப்பதாக ‘நீல்சன்’ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தொழிற்துறைகள் மந்த நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், நுகர்வுப் பொருட்களின் துறையிலும் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக ‘நீல்சன்’ தெரிவித்துள்ளது.

குறிப்பாக, குளிர்பானம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மலிவுவிலை மிட்டாய்கள் போன்றவை அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்களாக கருதப்படுகின்றன. விலை குறைவான இந்தப் பொருட்கள் கிராமப்புற சந்தைகளில் அதிகம் விற்பனையாகக் கூடியவை.

அதிவேகமாக நுகரும், நுகர்வோர் பொருட்கள் விற்பனையில் – ஒட்டுமொத்த வளர்ச்சியில் 36%, கிராமப்புறங்களை நம்பியே உள்ளது. ஆனால், கிராமப்புற சந்தைகளில் ஏற்பட்டுள்ள விற்பனை வீழ்ச்சியால், அதிவேக நுகர்வு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களில் இருக்கும் பெட்டிக்கடைகளில் அதாவது டீ முதல் பற்பசை விற்பனை 5 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது . கடந்த 2018ஆம் ஆண்டில் 20 சதவிகிதமாக இருந்த இந்த நுகர்வு வளர்ச்சி விகிதம், இந்த ஆண்டு வெறும் 5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வீழ்ச்சி, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத மிகமோசமான அளவு என்று ‘நீல்சன்’ தெரிவிக்கிறது.

வாகனங்களின் உற்பத்தி மற்றும் வாகனங்களின் விற்பனை 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது . புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகளைக் காணவில்லை என்று  நாட்டின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பாளரான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் கூறியுள்ளது. 

மேலும் ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி  சஞ்சீவ் மேத்தா கூறுகையில் விற்பனை மேபடும் என்ற நம்பிக்கை இருக்கிறது ஆனால் தற்போதுவரைக்கும் அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here