ஜோதிகா நடிப்பில் கடந்த ஆண்டு ‘நாச்சியார்’, ‘செக்கச் சிவந்த வானம்‘, ‘காற்றின் மொழி’ என வெளியான மூன்று படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இந்த வருடம் வெளியான ‘ராட்சசி’ படத்திற்கும் நல்ல வரவேற்பு. தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும்  ‘ஜாக்பாட்’ படமும் அதே போன்ற ஒரு வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

மேலும் நடிகர் கார்த்தியுடன், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படம், அறிமுக இயக்குநர் பிரட்ரிக் இயக்கத்தில் ‘பொன்மகள் வந்தாள்’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன்  இயக்கத்தில்  அவர் நடிக்கும் அடுத்த படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இக்கதையில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு, வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. 

திருமணத்துக்கு பின்னர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில்அமர்க்களப்படுத்தும் ஜோதிகா, “இரண்டாவது இன்னிங்சில் தான் என் மனதுக்கு நெருக்கமான படங்களாக அமைகின்றன” என தெரிவித்துள்ளார்.