காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பழுதடைந்த “கிராமஃபோன்’ போல சொன்னதையே சொல்கிறார் என்று விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, வீடியோ ஒன்றின் மூலம் ராகுல் பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக, பாஜக தலைவர்களுடன் கடந்த அக்டோபர் மாதம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய மோடி, ராகுல் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். “பழுதடைந்த கிராமஃபோன் போல, ராகுல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்; அவரது குழந்தைத்தனமான பேச்சுக்களையோ, மத்திய அரசுக்கு எதிராக அவர் கூறும் பொய்களையோ நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள். மாறாக வேடிக்கையான கருத்துகள் என புறந்தள்ளிவிடுவார்கள்’ என்று மோடி கூறியிருந்தார்.

அவரது இந்த விமர்சனத்துக்கு பதிலடியாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ராகுலை கிராமஃபோனுடன் ஒப்பிட்டு மோடி பேசும் காட்சிகளுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. பின்னர், நேரு-காந்தி குடும்ப உறுப்பினர்களை விமர்சித்து, பொதுக் கூட்டங்களில் மோடி பேசிய காட்சிகள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. காந்தி குடும்பம் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து குற்றம்சாட்டுவதை குறிப்பிடும் வகையில் இந்த வீடியோவை ராகுல் வெளியிட்டுள்ளார்.
மேலும், வீடியோவுடன் அவர் வெளியிட்ட பதிவில், “மிஸ்டர் 36 (மோடி) வழங்கும் பொழுதுபோக்கு வீடியோ இது. இதை குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்