த்ரிஷா நடிப்பில் கர்ஜனை படத்தை இயக்கிய சுந்தர் பாலு, அப்படம் வெளியாகும் முன் கன்னித்தீவு என்ற படத்தை இயக்குகிறார். வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, சுபிஷா பிரதான வேடங்களில் நடிக்கும் கன்னித்தீவின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

ஹாலிவுட் லேக் பிளாசிட் படத்தைப் போல இதில் வரும் நான்கு பெண்கள் ஏரியில் உள்ள ஒன்பது அடி நீள பிரமாண்ட முதலையுடன் மோதும் காட்சி படத்தில் இடம்பெறுகிறது. இதனை கேரளாவில் உள்ள அணை ஒன்றில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக பிரமாண்ட முதலை ஒன்றை செய்கிறார்கள். அத்துடன் கிராபிக்ஸையும் பயன்படுத்த உள்ளனர். இந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத முதலைச் சண்டை என்று இதனை விளம்பரப்படுத்தினாலும் ஆச்சரியமில்லை. அப்படித்தான் இயக்குநர் சுந்தர் பாலு சொல்லி வருகிறார்.

இந்த சண்டைக் காட்சியை ஸ்டன்ட் சிவா அமைக்கிறார். கன்னித்தீவு அரோல் கரோலி இசையில் வளர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here