கியா செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

The limited edition Kia Seltos will be available exclusively in the HTX trim.

0
52

கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் செல்டோஸ் அனிவர்சரி எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த ஸ்பெஷல்எடிசன், 2019 ஆகஸ்ட்டில் அறிமுகமான செல்டோஸின் ஓர் ஆண்டு நிறைவை நினைவுக்கூரும் விதமாக வெளியிடப்படுகிறது.

புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் வெளிப்புறத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் 17 இன்ச் அலாய்வீல்கள், டேங்கரைன் சென்டர் கேப், டூயல் மப்ளர் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாற்றங்கள்காரணமாக காரின் வெளிப்புற அளவீடு அதிகரித்து இருக்கிறது.

கியா செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ் மிஷன் மற்றும் ஐவிடி யூனிட் வழங்கப்படுகிறது. இந்த எடிஷன் மொத்தத்தில் 6 ஆயிரம் யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

இதன் விலை ரூ. 13.75 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here