கியான்வாபி; மற்றொரு மசூதி இடிப்பிற்கான சூழ்நிலையை நீதிமன்றம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்ற பத்திரிகையாளர் ராணா அயூப்; டிவிட்டர் பதிவு முடக்கம்

0
219

ஜூன் 26, ஞாயிற்றுக்கிழமை, கியான்வாபி மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் சங்கம் தொடர்பான பத்திரிகையாளர் ராணா அயூபின் டிவிட்டர் பதிவுகளை டிவிட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது.

இது தொடர்பாக ராணா ஆயூப்பிற்கு ட்விட்டர் நிறுவனம் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், “இந்திய அரசின் தொழில்நுட்ப சட்டம் 2020 கீழ் அவரது ட்விட்டர் கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சலில் உள்ள ஸ்கிரீன்ஷாட்டை அவர், தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கியான்வாபி மசூதி தொடர்பாக பதிவிட்ட குறிப்பிட்ட ட்விட்டர் பதிவு மட்டுமே இந்தியாவில் பார்க்க முடியாத வகையில் முடக்கப்பட்டுள்ளது.

அந்த ட்விட்டர் பதிவில், கியான்வாபி மசூதியில் ஆய்வு செய்ய வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்தது குறித்து பதிவிட்டிருந்த ராணா அயூப், பாபர் மசூதி இடிக்கப்பட்டத்தை மேற்கோள் காட்டி, மற்றொரு மசூதி இடிப்பிற்கான சூழ்நிலையை நீதிமன்றம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

ராணா அயூப்பின் ட்விட்டர் பதிவு தொடர்பான நடவடிக்கை, அவரின் கடந்த கால செயல்பாடுகளுக்கான தாமதமான எதிர்வினை இருக்கலாம் என்று பிரசார் பாரதியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சஷி சேகர் வெம்பதி தெரிவித்துள்ளார்.

மேலும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான அவரின் ட்விட்டர் பதிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here