உலகில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட நண்டு வகைகள் உள்ளன. இதில் புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, அயோடின், வைட்டமின் பி, சி போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. மீன்கள், இறால்களுக்கு அடுத்து வணிக சந்தையில் நண்டுகளுக்கு அதிக கிராக்கி உள்ளது.

ஜப்பானில் இப்போது பனிக்காலம். இந்த பனிக்காலத்தில் பிடிபடும் நண்டுகளை ஜப்பானியர்கள் மிகவும் விரும்பி சமைத்து சாப்பிடுகின்றனர்.

இந்நிலையில் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் ஹோன்சூ தீவில், டோட்டோரி நகரில் உள்ள மீன் பிடி துறைமுகத்தில் பனிக்கால நண்டுகள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு நண்டு 46 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.33 லட்சம்) ஏலம் எடுக்கப்பட்டது. அந்த நண்டு 14.6 செ.மீ. நீளமும் 1,240 கிராம் எடையும் கொண்டதாகும்.

இது குறித்து உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் எதிர்பார்க்காத விலையில் நண்டு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நண்டு கடந்த ஆண்டின் சாதனையை முறியடித்து இருக்கிறது. எனவே இது உலகின் மிக விலையுயர்ந்த நண்டு என்று நாங்கள் நம்புகிறோம். கின்னஸ் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பதை அரசாங்கம் பரிசீலிக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here