கா‌‌ஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறு- ரவிசங்கர் பிரசாத்

0
60
Ravi Shankar Prasad, Minister of Communications and Information Technology of India at the World Economic Forum - India Economic Summit 2014 in New Delhi, Copyright by World Economic Forum / Benedikt von Loebell

காஷ்மீர் பிரச்சினையை நேரு கையாண்ட விதம் தவறு என்றும், வரலாற்றுப் பிழையை பிரதமர் மோடி மகத்தான தைரியத்துடன் சரி செய்திருப்பதாகவும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் பதவியேற்று 100-வது நாள் நிறைவை முன்னிட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் பிரச்சினையை நாட்டின் முதல் பிரதமரான நேரு நேரு கையாண்ட விதம் தவறு என்றும் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேல் மேற்கொண்ட நடவடிக்கைகளே சரியானவை என்றும் தெரிவித்தார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது வரலாற்றுப் பிழை என்றும் அந்த சட்டப்பிரிவை மகத்தான தைரியத்துடன் ரத்து செய்ததன் மூலம் பிரதமர் மோடி வரலாற்றுப் பிழையை சரி செய்துவிட்டதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறினர். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அங்கு ஒரு தோட்டா கூட சுடப்படவில்லை என்ற அவர், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.