காஷ்மீர் 370 சிறப்புரிமை ரத்து: இனி என்னென்ன நிகழும்? புதிய சட்டங்களால் அமைதி தோன்றுமா?

0
715

அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு வழங்கும் அதிகாரத்தின்படி மாநில அரசின் ஒப்புதலோடு” குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவில் இதுவரை இந்தியாவில் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் இனி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசின் ஒப்புதலுடன் என்று சொல்லும்போது, அது இங்கு மாநில ஆளுநரைக் குறிக்கும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், என்னவெல்லாம் நிகழலாம் என்பதை அரசமைப்புச் சட்ட சட்ட வல்லுநர் குமார் மிஹிரிடம் பிபிசி இந்தி சேவையின் வினீத் கரே பேசி தொகுத்த பத்து தகவல்கள்.

  • இந்திய குடியுரிமை உள்ள யார் வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கலாம்.
  • ஜம்மு காஷ்மீர் அரசுப் பணிகளில் காஷ்மீர் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே சேர முடியும் என்று இருந்தது. இனி யார் வேண்டுமானாலும் சேரலாம்.
  • முன்பு அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் உரிமை மாநில முதல்வரின் ஆளுகைக்கு கீழ் இருந்தது. இப்போது அது ஆளுநர் வழியே நேரடியாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
  • ஒன்றிய அரசு ஏதேனும் சட்டம் இயன்றினால், காஷ்மீர் மாநில அரசு ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே அது காஷ்மீரில் நடைமுறைக்கு வரும். ஆனால், இனி அப்படி இல்லை.
    *அது போல உச்சநீதிமன்ற உத்தரவுகளும் நேரடியாக காஷ்மீரில் நடைமுறைக்கு வரும்.
    *காஷ்மீர் மாநிலத்திற்கு என்றே உள்ள கொடி முக்கியத்துவத்தை இழக்கும்.
    சட்டப்பேரவையின் ஆயுள் காலம் ஆறு ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாக மாறும்
    *பெண்கள் தொடர்பான உள்ளூர் தனிநபர் வழக்காறு சட்டங்கள் இந்த சட்டத்திருத்தங்கள் நிறைவேறினால் இனி இருக்காது.
    *இதுநாள் வரை காஷ்மீரில் இந்திய தண்டனைச் சட்டம் அமலில் இல்லை. இனி அங்கு இந்திய தண்டனை சட்டம் அமலில் இருக்குமா அல்லது உள்ளூர் ரன்பீர் தண்டனை சட்டம் அமலில் இருக்குமா என்பதை மத்திய அரசோ அல்லது நாடாளுமன்றமோ முடிவு செய்யும்.
    *முன்னதாக இருந்த உள்ளூர் பஞ்சாயத்து சட்டங்கள் நீடிக்குமா அல்லது மாற்றம் செய்யப்படுமா என்று இனிதான் முடிவு செய்யப்படும்.

காஷ்மீரில் புதிய சட்டங்களால் அமைதி தோன்றுமா? புதிய சிக்கல்கள் தோன்றுமா?

காஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 370ஐ நீக்க வேண்டும் என்பதே எப்போதும் பாஜகவின் கொள்கையாக இருந்துவருகிறது.

ஆனால், இந்த சிறப்புரிமையை நீக்குவதற்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மசோதாக்களை தாக்கல் செய்வதற்கு

உருவாக்கப்பட்ட சூழ்நிலைகள் வரலாறு காணாதது என்று காஷ்மீர் மாநில விவகாரத்தை கவனிப்பவர்கள், அரசால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தையாளர்கள் கூறுகிறார்கள்.

அத்தகைய நபர்களில் ஒருவர் ராதாகுமார்.

பிபிசியிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் கடந்த சில ஆண்டுகளாக சமூக ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் ஸ்திரத்தன்மையோடு இருக்கவில்லை என்கிறார்.

இதுவரையிலான சூழ்நிலைகள், மனப் பதற்றத்தை நோக்கியே இட்டுச்செல்கின்றன என்கிறார் அவர்.

“இந்த மனப் பதற்றங்களை சரி செய்யாவிட்டால், அது வேறுவிதமான மனக்கசப்புகளைத் தோற்றுவிக்கும்” என்கிறார் அவர்.

கடந்த பல தேர்தல்களின்போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 370ஐ ஒழிக்கப்போவதாக தெரிவித்துவந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்தது. ஆனால் இந்தக் கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணியாகப் பார்க்கப்பட்டது.

தொடக்கத்தில் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால் பிறகு கூட்டணியில் பிளவுகள் தோன்றி கடைசியில் உடைந்தேபோய்விட்டது. அதன்பிறகு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது.

அது முதல் கவர்னர் மூலமாக பாஜக ஆட்சியை நடத்திவருகிறது. மாநில சட்டமன்றத்துக்கு மீண்டும் தேர்தல் வரும் என்று அவ்வப்போது கணிக்கப்பட்டது. ஆனால், நடக்கவில்லை. “ஜனசங்க காலத்தில் இருந்தே ஜம்மு காஷ்மீர் மாநில அரசியலில் கால்பதிக்க பாஜக முயன்று வந்தது” என்று கூறுகிறார் மூத்த இதழாளர் ராகுல் பாண்டிட்டா.

“இந்த மாநிலத்தின் அரசியல் விவகாரங்களில் தமது நேரடித் தலையீடு வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. எனவேதான் கீழ்மட்டத்தில்கூட புதிய தொண்டர்களை சேர்க்க அந்தக்கட்சி முயன்று வருகிறது. அவர்கள் பலம் பெற்றுவருவதாக காட்டும்போது, மக்களை கட்சிக்குள் கொண்டுவருது எளிது என்று அந்தக் கட்சி நினைக்கிறது. பாஜக தமது தொண்டர் பலத்தை, திட்டமிட்டு, வேகமாக அதிகரித்துவருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்கிறார் அவர்.

“ஆயுதப் படையினரை பெருமளவில் குவிப்பது, ஊரடங்குச் சட்டம் அமல்படுத்துவது, தலைவர்களை வீட்டுச் சிறையில் வைப்பது, இணையச் சேவைகளைத் துண்டிப்பது ஆகியவை தேவையற்றவை” என்கிறார் அரசு நியமித்த பேச்சுவார்த்தையாளர் ராதா குமார்.

“யாரைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள்? ஒமர் அப்துல்லாவும், மெஹபூபா முஃப்தியும் கிளர்ச்சியா செய்வார்கள்? தாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அரசு என்ன முடிவு வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், ஏன் இப்படியெல்லாம்?” என்று கேட்கிறார் அவர்.

இந்த முன்மொழிவுகள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் முன்பே அர்நாத் யாத்ரீகர்கள் பாதியில் நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், புதிய சட்டங்கள், குறிப்பாக மாநிலத்தைப் பிரிக்கும் சட்டம், அம்மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவருவதற்குப் பதில், மேலும் பதற்றத்தையே உருவாக்கும் என்று காஷ்மீர் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

 bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here