காஷ்மீர் குறித்து விவாதிக்க சவுதியில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டம்

சவுதி அரேபியா  காஷ்மீர் விவகாரம் குறித்து சர்வதேச கவனத்தைப் பெறும் வகையில்  இஸ்லாமிய நாடுகளின் சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தப்போகிறது.

கடந்த வாரம் கோலாலம்பூரில், மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தலைமையில் இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் துருக்கி அதிபர் எர்டோகன், ஈரான் அதிபர் ஹசன் ஹசன் ரூஹானி ஆகியோர் கலந்துகொண்டனர். உலக அளவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பது பற்றி ஆலோசிப்பதற்காக நடைபெற்ற இந்தக் கூட்டத்திலிருந்து பாகிஸ்தான் விலகியது.

கோலாலம்பூர் கூட்டத்தில் பாகிஸ்தான் கலந்துகொள்ளாததால், காஷ்மீர் விவகாரம் குறித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் இம்ரான் கானுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு நழுவியது. அதேநேரம், ஈரான் மகாதீரின் மாநாட்டில் இடம்பெறுவதை சவுதி விரும்பவில்லை.
சவுதி அரேபியாவின் தலையீட்டால்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்த மாநாட்டில் பங்கேற்பதைத் தவிர்த்தாகத் கூறப்படுகிறது.

மேலும் சவுதி அரேபியா தானே, காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க இஸ்லாமிய ஒத்துழைப்புக் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டை கூட்டப்போவதாகக் கூறியிருக்கிறது.

சவுதியின் வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் பின் அல்-சாத் கடந்த வாரம் பாகிஸ்தான் சென்றபோது இதனைத் தெரிவித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. சவுதி நடத்தப்போகும் மாநாடு எப்போது நடக்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

அந்தக் கூட்டத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்புக் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

சென்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீர் குறித்து இந்தியா எடுத்த நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து சர்வதேச கவனத்தை ஈர்க்க குரல் கொடுத்தாலும் அவருக்கு மற்ற இஸ்லாமிய நாடுகள் எதிர்பார்த்த ஆதரவைத் தரவில்லை.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது போன்ற பிரச்சினைகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய இடம் வகிக்கும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் ஆதரவு பாகிஸ்தானின் எதிர்ப்பை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவியிருக்கிறது.

இந்நிலையில், சவுதி அரேபியா காஷ்மீர் விவகாரம் குறித்து நடத்தவுள்ள கூட்டம் இந்தியாவுக்கு பெரிய பின்னடையை ஏற்படுத்தும்என்பதில் எள்ளளவும்  சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here