காஷ்மீர் விவகாரம் குறித்து பேச ட்ரம்ப் என்ன உலக காவலரா? அசாதுதீன் ஓவைசி

0
431

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசியதாக கூறப்படும் நிலையில், இது குறித்து அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. 

இந்த விவகாரம் குறித்து இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசி மூலம் 30 நிமிடங்கள் உரையாடல் நடத்தியதாகவும், அப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் நடந்துக் கொள்கிறார் என அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி குற்றம் சாட்டியதாக தகவல் வெளியானது. 

இது குறித்து அனைத்து இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்கதுல் தலைவர் ஓவைசி அசாதுதீன் கூறுகையில், ‘காஷ்மீர் நிலவரம் உள்நாட்டு விவகாரமாக இருந்தால், பிரதமர் மோடி டிரம்புடன் ஏன் காஷ்மீர் குறித்து தொலைபேசியில்  பேச வேண்டும்? . 

இதன் மூலம் காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார் என்பதை மோடி ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. காஷ்மீர் விவகாரம் இரு நாடுகள் தொடர்பானது. 

இதில் மூன்றாவதாக ஒரு நாடு தலையிட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் காஷ்மீர் விவகாரம் குறித்து பேச டிரம்ப் சர்வதேச காவலரா? அல்லது உலகிலேயே மிகவும் வலிமையான மனிதரா?’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here