காஷ்மீர் வரைபடத்தை காட்டி இந்தியாவை கோபப்படுத்திய பாகிஸ்தான் தரப்பு

National Security Adviser Ajit Doval and the Indian team walked out a meet of the Shanghai Cooperation Organization hosted by Russia after Pakistan used a doctored map as a background for its representative.

0
106

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் இணையவழி கூட்டத்தில், காஷ்மீரை தங்கள் நாட்டின் பிராந்தியமாக காட்டும் வரைபடத்தை பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காட்டியதால், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட முதலாம் ஆண்டு தினமான சென்ற ஆகஸ்டு 5ஆம் தேதி, ஜம்மு – காஷ்மீரை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக இணைத்து பாகிஸ்தான் புதிய வரைபடத்தை வெளியிட்டிருந்தது.

காஷ்மீர் வரைபடத்தை காட்டி இந்தியாவை கோபப்படுத்திய பாகிஸ்தான் தரப்பு

பாகிஸ்தானின் செயல் கூட்டத்தின் விதிகளை மீறியதாகும். நாங்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்பு, எங்கள் எதிர்ப்பை காட்டுவதற்காக கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தோம்,” என வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

மேலும் , “இந்த கூட்டத்தின் நோக்கத்தையே தவறாக வழிநடத்தும் எண்ணத்துடன் பாகிஸ்தான் செயல்பட்டது,” என அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் புதிய அரசியல் வரைபடத்தை அண்மையில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டார்.

அந்த வரைப்படத்தில் இந்திய கட்டுப்பாடில் இருக்கும் ஜம்மு காஷ்மீர், குஜராத் மாநிலத்தின் ஜூனாகத் ஆகிய பகுதிகள் இடம் பெற்று இருந்தன.

இப்படியான சூழலில். லடாக்கில் 38 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதியை சீனா தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்துள்ளது. அதேபோல் சீன-பாகிஸ்தான் எல்லை உடன்படிக்கை என்று கூறப்படும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் 5 ஆயிரத்து 180 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலத்தை பாகிஸ்தான் சீனாவுக்கு வழங்கியுள்ளது என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கியது.

இதில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. தற்போதுவரை இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகவில்லை. எல்லை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், பாரம்பரிய மற்றும் வழக்கமான எல்லை சீரமைப்பை சீனா அங்கீகரிக்கவில்லை. இந்த சீரமைப்பு நன்கு நிறுவப்பட்ட புவியியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்று நாம் கருதுகிறோம் என்றார்.

மெய்யான எல்லைக்கோட்டை தன்னிச்சையாக மாற்றியமைப்பது இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை மீறும் செயல் என சீனாவிடம் தூதரக ரீதியாக தெரிவித்துள்ளோம்.இரு நாட்டு எல்லைக் கோட்டின் அருகிலும், உள்பகுதியிலும் சீனா ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக எல்லைப்பகுதியில் இந்தியாவும் ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துள்ளது.

கிழக்கு லடாக், கோஜ்ரா, காங்கா லா, பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் பல இடங்களில் இரு நாட்டுகளும் மோதலுக்கு வழிவகுக்கும் வகையில் உராய்வு புள்ளிகள் உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல்காந்தி பகிர்ந்துள்ள ட்வீட்டில், “சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக மோதி இந்தியாவை தவறாக வழிநடத்தியது பாதுகாப்பு அமைச்சரின் கூற்றிலிருந்து அறிய முடிகிறது. நம் நாடு எப்போது இந்திய ராணுவத்துடன் இருந்திருக்கிறது; இருக்கும்.

ஆனால், மோதி… நீங்கள் எப்போது சீனாவுக்கு எதிராக நிலைபாடு எடுப்பீர்கள். சீனாவிடம் உள்ள நம் நிலத்தை எப்போது மீட்பீர்கள்? சீனாவின் பெயரை கூற அஞ்சாதீர்கள்,” என அவர் ட்வீட் பகிர்ந்துள்ளார்.

நன்றி : பிபிசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here