காஷ்மீர் பெண்களை இனி கூட்டிவரலாம் என்ற ஹரியானா முதல்வரையும், ஆர்எஸ்எஸ் ஸையும் விளாசிய ராகுல்காந்தி

0
536

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் நோக்குடன் பாரதிய ஜனதா அரசு அறிமுகம் செய்த ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

ஜம்மு & காஷ்மீர்  ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை  தனி யூனியன் பிரதேசமாகவும் உருவாக்க இந்த மசோதா வகை செய்கிறது.

இதைத் தொடர்ந்து பல பாஜக தலைவர்கள் பல கருத்துக்களைக்  கூறி வரும் நிலையில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இனி காஷ்மீர் பெண்களை கூட்டி வரலாம் என்று மக்கள் கூறுகிறார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து  ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்  ஹரியானா முதல்வர் கட்டாரின் காஷ்மீர் பெண்கள் குறித்த கருத்து  வெறுக்கத்தக்கது. அவரின் கருத்து பலவீனமான , பாதுகாப்பற்ற, பரிதாபகரமான ஆணின் மனதை ஆர் எஸ் எஸ் கொடுக்கும் பயிற்சி என்னவெல்லாம்  செய்திருக்கிறது  என்பதை கட்டாரின் கருத்து  பிரதிபலிக்கிறது. பெண்கள் ஆண்களின் சொத்து அல்ல என்று பதிவிட்டுள்ளார் 

ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து பேசப்பட்ட நிகழ்ச்சியில் ஹரியானா முதல்வர் இந்த சர்ச்சைக் கருத்தைக் கூறியுள்ளார்.  

நாங்கள் பெண்களுக்காக  Beti Bachao Beti Padhao’,(Educate the Girl Child, Save the Girl Child’) பெண் குழந்தைகளை படிப்பிப்போம்; அவர்களை பாதுகாப்போம் போன்ற பலத் திட்டங்களை கொண்டு வந்தோம் . இந்தப் பிரச்சாரத்தின் வெற்றிக் குறித்து பத்தேஹாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில்  ஹரியானா முதல்வர்  பேசினார்.  மோசமான பாலின விகிதம், மற்றும் பெண் சிசுக் கொலைக்கு  ஹரியானா பெயர்பெற்றது . மத்திய அரசுக் கொண்டு வந்தத் திட்டத்தால் பாலின விகிதத்தை 850 லிருந்து 933 வரைக்கும் கொண்டு வந்துள்ளோம் . இது ஒரு மிகப்பஎரிய சமூக  மாற்றம் என்றார் அவர்.  

இந்த மோசமான பாலின விகிதம் எதிர்காலத்தில் எவ்வளவு பிரச்சனைகளை கொண்டு வரும் என்று இளைஞர்களும் , பெரியவர்களும் தெரிந்துக் கொள்ள வேண்டும் . நம்முடைய அமைச்சர் தனகர் ஜி பீகாரிலிருந்து பெண்களைக் கொண்டு வரலாம் என்றார். தற்போது காஷ்மீரிலிருந்தும் பெண்களைக் கொண்டு வரலாம் என்றும் கூறுகிறார்கள் என்று கூறிய ஹரியானா முதல்வர் ஜோக் கூறியதைப் போல் சிரித்து விட்டு மீண்டும் பேசியவர் பாலின விகிதம் சரியாக இருந்தால் சமூதாயத்தில்  சமநிலை இருக்கும் என்றார்.  

http://Scroll.in