ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத மோதலில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

1. கடந்த 2013ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பயங்கரவாத மோதலில் 181 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 100 பேர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். 20 பேர் பொதுமக்கள், 61 பேர் பாதுகாப்புப் படையினர் ஆவர்.

2. இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 358ஆக அதிகரித்துள்ளது. இது 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 98 சதவிகிதம் அதிகம்.

3. 2017ஆம் ஆண்டில் பயங்கரவாத மோதலில் உயிரிழந்த 358 பேரில் 218 பேர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். 57 பேர் பொதுமக்கள், 83 பேர் பாதுகாப்புப் படையினர் ஆவர். கடந்த 2013ஆம் ஆண்டு உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கையைவிட 2017ஆம் ஆண்டு உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 185 சதவிகிதம் அதிகம்.

4. கடந்த ஐந்தாண்டுகளில் இது வரை பாதுகாப்புப் படை வீரர்கள் 324 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 706 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

5. 2013ஆம் ஆண்டில் 181 பேரும், 2014ஆம் ஆண்டில் 193 பேரும், 2015ஆம் ஆண்டில் 174 பேரும், 2016ஆம் ஆண்டில் 267 பேரும், 2017ஆம் ஆண்டில் 358 பேரும் உயிரிழந்துள்ளனர்.

நன்றி: IndiaSpend

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்