ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது, பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தின் அவ்னீரா பகுதியில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினர் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்தனர். அதேபோன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டம், ஹாஜின் பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போலீசார் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: ”நீதிபதிக்கே பாதுகாப்பில்லாத இலங்கைக்கு எப்படித் திரும்புவோம்?”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்