உயிரிழந்த காவல்நிலைய அதிகாரி பெரோஸ் அகமது

காஷ்மீர் மாநிலம் அனந்தாக் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீசார் ஆறு பேர் உயிரிழந்தனர்.

தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் அச்சாபல் என்னும் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல் நிலைய அதிகாரி உட்பட 6 போலீசார் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த காவல்நிலைய அதிகாரி பெரோஸ் என்பவர் புல்வாமா பகுதியைச் சேர்ந்தவர். இத்தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்போ பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. முன்னாதாக, குல்கம் மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை, போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இதையும் படியுங்கள் : நாடு முழுவதும் மகாபாரத பூங்காக்கள் – மோகன்லால் படக்குழுவின் திட்டம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்