காஷ்மீர் பண்டிட்டுகளின் வெளியேற்றத்திற்கு முன்னாள்‌ பிரதமர்‌ வி.பி.சிங்‌, முன்னாள்‌ மத்திய உள்துறை அமைச்சர்‌ ஆகியோர்தான்‌ காரணம்‌ : சுப்பிரமணியன் சுவாமி

0
68

காஷ்மீர் பண்டிட்டுகளின் வெளியேற்றத்திற்கு முன்னாள்‌ பிரதமர்‌ வி.பி.சிங்‌, முன்னாள்‌ மத்திய உள்துறை அமைச்சர்‌ முஃப்தி முகமது சயீத்‌ ஆகியோர்தான்‌ காரணம்‌ என்று பாஜக தலைவர்‌ சுப்பிரமணியன்‌ சுவாமி குற்றஞ்சாட்டியுள்ளார்‌.

காஷ்மீரி புத்தாண்டான நவ்ரேயை முன்னிட்டு ஸ்ரீநகரில்‌ ‘நவ்ரே மிலன்‌’ என்ற கலாசார விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில்‌ சுப்பிரமணியன்‌ சுவாமி கலந்துகொண்டு பேசியதாவது:

காஷ்மீரில்‌ உள்ள முஸ்லிம்களும்‌ காஷ்மீர்‌ பண்டிட்டுகளும்‌ ஒரே மாதிரியானவர்கள்‌. அவர்களிடம்‌ மரபணு பரிசோதனை மேற்கொண்டால்‌, முடிவுகளில்‌ வித்தியாசம்‌ இருக்காது. ஆனால்‌ காஷ்மீர்‌ பண்டிட்டுகளுக்கு அநீதி இழைக்கப்பட்டது. அதற்கான மொத்த பழியும்‌ தேசிய மாநாட்டுக்‌ கட்சித்‌ தலைவர்‌ ஃபரூக்‌ அப்துல்லா மீது சுமத்தப்படுகிறது. ஆனால்‌, காஷ்மீர்‌ பண்டிட்டுகள்‌ இடம்பெயர்ந்ததற்கு முன்னாள்‌ பிரதமர்‌ வி.பி.சிங்‌, முன்னாள்‌ மத்திய உள்துறை அமைச்சர்‌ முஃப்தி முகமது சயீத்‌ ஆகியோர்தான்‌ காரணம்‌ என்றார்‌ அவர்‌.

இதையும்  படியுங்கள்👇

எப்படி கடத்தப்பட்டார்‌?? கடந்த 1989-ஆம்‌ ஆண்டு முஃப்தி முகமது சமயீத்தின்‌ மகள்‌ ௬பையா சயீத்‌ கடத்தப்பட்டதை நினைவுகூர்ந்து சுப்பிரமணியன்‌ சுவாமி பேசுகையில்‌, “ருபையா சயீத்‌ எப்படி கடத்தப்பட்டார்‌ என்பது தெளிவாகத்‌ தெரியவில்லை. அவரை மீட்க ஜம்மு காஷ்மீர்‌ விடுதலை முன்னணியைச்‌ (ஜேகேஎல்‌எஃப்‌) சேர்ந்த 13 தீவிரவாதிகள்‌ சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்‌.

இதையும்  படியுங்கள்👇

அதே வேளையில்‌, பிரதமர்‌ சந்திரசேகர்‌ அரசில்‌ நான்‌ அமைச்சராகப்‌ பதவியேற்றபோது தேசிய மாநாட்டுக்‌ கட்சி எம்‌.பி. சைஃபுதீன்‌ சோஸின்‌ மகளை ஜேகேஎல்‌எஃப்‌ தீவிரவாதிகள்‌ கடத்தினர்‌. எனினும்‌ அவரை மீட்பதற்காக சந்திரசேகர்‌ அரசு எந்தத்‌ தீவிரவாதியையும்‌ விடுவிக்கவில்லை. எங்களது எச்சரிக்கையால்‌ தீவிரவாதிகள்‌ அச்சமடைந்தனர்‌. இதனால்‌ சைஃபுதீன்‌ சோஸின்‌ மகளை ஆட்டோவில்‌ அழைத்து வந்து அவரின்‌ வீட்டில்‌ தீவிரவாதிகள்‌ விட்டுச்‌ சென்றனர்‌.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து திரும்பக்‌ கிடைக்காது. அதனை ஜம்மு-காஷ்மீர்‌ மக்கள்‌ மறந்துவிட வேண்டும்‌. வேறு எந்த மாநிலத்துக்கும்‌ சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாதபோது, காஷ்மீருக்கு மட்டும்‌ ஏன்‌ அந்த அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்‌? தற்காலிக ஏற்பாட்டில்‌ சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அதனை குடியரசுத்‌ தலைவரின்‌ உத்தரவால்‌ ரத்து செய்ய முடியும்‌.

பாகிஸ்தான்‌ ஆக்கிரமிப்பு காஷ்மீர்‌, அக்சாய்‌ சின்‌ ஆகியவற்றை மீட்பதில்‌ நாடு கவனம்‌ செலுத்த வேண்டும்‌ என்றார்‌ அவர்‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here