“காஷ்மீரை அழித்துவிட்டு பாஜக வெளியேறி இருக்கிறது ” – அர்விந்த் கெஜ்ரிவால்

0
260

காஷ்மீரை அழித்துவிட்டு, கூட்டணி அரசில் இருந்து பாஜக வெளியேறி இருப்பதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

காஷ்மீரில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சரியாக செயல்படுத்தபடவில்லை என்பதால் பாஜக, மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணி முறிந்தது .

காஷ்மீரில் ஆளும் கூட்டணி அரசில் இருந்து பாஜக வெளியேறிய நிலையில், முதல்வர் மெஹ்பூபா முப்தி பதவி விலகினார். ஆளுநரைச் சந்தித்து மெஹ்பூபா முப்தி தனது ராஜினமா கடிதத்தை அளித்தார்.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் காஷ்மீரை அழித்தபிறகு , பாஜக கூட்டணி அரசில் இருந்து வெளியேறியுள்ளது.

அவரது மற்றுமொரு டிவீட்டில் பணமதிப்பிழப்பு காஷ்மீரில் இருக்கும் தீவிரவாதங்களை ஒடுக்கும் என்று மோடி அறிவித்திருந்தாரே ? அப்புறம் என்னவானது ? ஏன் கூட்டணியில் இருந்து வெளியேறினீர்கள் என்றும் பாஜகவை குற்றஞ்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்