காஷ்மீரில் 4000த்துக்கும் மேற்பட்டோர் கைது; வீட்டுக்காவல் கைது குறித்த தகவல் இல்லாத அரசின் அரைகுறை அறிக்கை

0
317

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததிலிருந்து  இதுவரை 4000 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக அரசின் அறிக்கை  தெரிவிக்கிறது . 

இந்திய ஊடகங்களில் காஷ்மீரில் எந்தவித போராட்டங்களும் நடைபெறவில்லை என சொல்லிக்கொண்டாலும் பாதுகாப்புப் படையினருக்கும் காஷ்மீரிகளுக்கும் மோதல் இருந்துகொண்டே உள்ளது.

போராட்டங்களை தடுக்கும் வகையில் 3,800 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டிருப்பதாக செப்டம்பர் 6-ஆம் தேதியிட்ட அரசாங்க அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம். இதில் சுமார் 2600 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

உள்துறை அமைச்சகமோ அல்லது ஜம்மு காஷ்மீர் போலீசாரோ இந்தக் கைதுகள் குறித்து பதிலளிக்கவில்லை. 

இவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை ஆனால் சிலரை பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே 2 வருடங்கள் வரைக்கும் சிறையில் வைத்திருக்க முடியும். 

தடுப்பு கைதுகள் நடந்திருப்பதை முதன்முதலாக அரசு வெளியிட்ட இந்த அறிக்கை உறுதிபடுத்துகிறது. அதோடு, யார் எப்போது கைது செய்யப்பட்டார்கள் என்கிற விவரத்தையும் இது அளித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட 200 அரசியல்வாதிகள், 100-க்கும் மேற்பட்ட செயல்பாட்டாளர்கள், பிரிவினை கோரும் கிளர்ச்சியாளர்கள் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 3000-க்கும் மேற்பட்டோர், கல்வீச்சில் ஈடுபடுபவர்கள் மற்றும் இதர குற்றங்களில் ஈடுபடுவர்கள் எனவும், இதில் 85 பேர் ஆக்ராவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டதாகவும் போலீசார்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

காஷ்மீரில்  நடந்து வரும் சமீபத்திய தனித்துவமான கைதுகள், பரவலான பயத்தையும் அந்நியப்படுத்தலையும் ஏற்படுத்தியிருப்பதாக அம்னெஸ்டி அமைப்பு கூறியுள்ளது.

தகவல் தொடர்பு துண்டிப்பு, கடுமையாக்கப்பட்ட பாதுகாப்பு, அரசியல்வாதிகளின் கைதுகள் ஜம்மு காஷ்மீரை  மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டன என்று கூறுகிறார் அம்னெஸ்டி இந்தியாவின் தலைவர் ஆகர் பட்டேல்.

‘வன்முறைகளை தடுக்கும் நோக்கத்துடன்’ இந்தக் கைது நடவடிக்கையை எடுத்திருப்பதாக அரசு கூறுகிறது . காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 13 காவல் மாவட்டங்களில் நடந்த இந்த கைதுகளில், ஏறக்குறைய 1000க்கும் மேற்பட்டோர் ஸ்ரீநகர் பகுதிகளில் கைதாகியிருக்கிறார்கள். முன்பு, ஊரகப் பகுதிகளில்தான் அமைதியின்மை இருக்கும்.

கைது செய்யப்பட்ட அரசியல்வாதிகளில் 80 பேர் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள், 70 பேர் தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்தவர்கள், 10-க்கும் மேற்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 

கிளர்ச்சி குழுக்களுடன் தொடர்பிருப்பதாகக் கூறி 150-க்கும் மேற்பட்டவர்களை  கைது செய்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். 

1200-க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் சிறைகளிலேயே உள்ளனர். அரசின் அறிக்கை வெளியாவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு  வரை ஒவ்வொரு நாளும்  24 க்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டிருப்பதாக அறிக்கை கூறுகிறது .

 இந்த அரசின் அறிக்கையில் முறைசாரா வீட்டுக் காவல் கைது குறித்து தகவல் ஏதும் சொல்லப்படவில்லை. அதுபோல, சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு கைதானவர்கள் குறித்த விவரமும் இதில் இல்லை. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு கைதான கிளர்ச்சியாளர்கள் குறித்தும் எந்த தகவலும் இல்லை . 

முன்னதாக, பிரிவினை கோரும் முக்கியமான தலைவர் ஒருவர், 250-க்கும் மேற்பட்ட கிளர்ச்சி இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு முன்பே கைதானதாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.

telegraphindia.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here