காஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் கைது; உள்ளூர் ஊடகங்களுக்கு விடுத்த எச்சரிக்கை

'Illegal' Arrest of Kashmiri Editor Part of Attempts to Muzzle Local Press

0
291

The action against Ghulam Jeelani Qadri in a 27-year-old case has come at the time when press freedom in the Valley is under a severe and sustained attack.

காஷ்மீரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் குலாம் ஜீலானி கத்ரியை திங்கள் கிழமை நள்ளிரவு போலீஸ் கைது செய்து  அழைத்துச் சென்றது. 62 வயதான குலாம் ஜீலானி, உருது நாளிதழ் அஃபாக் – கின் நிறுவனர், எடிட்டர். குலாம் ஜீலானியை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். 

அவருடைய கைது 1992 இல் பதியப்பட்ட வழக்கு சம்பந்தமானது. தடா நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்த போது அவர் முறையாக ஒத்துழைக்கவில்லை, அதனால்தான் இந்தக் கைது  என்று கிரேட்டர் காஷ்மீர் பத்திரிகையிடம் ஹசீப் முகல், ஶ்ரீநகர் எஸ்பி கூறியுள்ளார். 

குலாம் ஜீலானியின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் கூறுகையில் அவரை துன்பறுத்தும் நோக்கத்துடன் அவரை கைது செய்தனர் என்றார்கள்.    

1993 லிருந்து குலாம் ஜீலானி இருமுறை பாஸ்போர்ட்டு சரிபார்ப்புக்காக   போலீசை சந்தித்துள்ளார். இருந்தபிறகும் அவரை ஏன் பிரகடனபடுத்தப்பட்ட குற்றவாளி என்று கூறவேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர். குலாம் ஜீலானி பத்திரிகை அங்கீகாரக் குழுவிலும் ,  பத்திரிகை ஆலோசனை குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார். 

வழக்கு குறித்த விவரங்களை அளிக்காத காவல்துறையிடம் நீதிபதி விளக்கம் கேட்டார். தாடா நீதிமன்றம் விதித்த பிடி வாரண்டின் அடிப்படையில்  ஏன் இவ்வளவு வருடங்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நீதிபதி காவல்துறையிடம் விளக்கம் கேட்டார். அவர் தலைமறைவுக்கு முன்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள் என்றும் நீதிபதி போலீஸாரிடம் கேள்வி எழுப்பினார்.  

கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆன  வழக்கு 8 பத்திரிகையாளர்களை சம்பந்தபடுத்தியிருக்கிறது. அதில் 3 பத்திரிகையாளர்கள் இறந்துவிட்டார்கள். 90 களில் குலாம் ஜீலானி ஜே&கே நியூஸ் – ஏஜென்சியை நடத்தி வந்தார். அந்த ஏஜென்சியில் 1992இல் தீவிரவாதிகள் கொடுக்கும் செய்தி குறிப்புகள்  வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது . அப்போது  காஷ்மீரில்  செய்தித்தாள்கள் விநியோகிப்பது  தடை செய்யப்பட்டிருந்த காலம்.    

1993 இல் குலாம் ஜீலானிக்கு எதிராக பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தும் இத்தனை வருடங்களாக கைது நடவடிக்கை நடைபெறவில்லை. 

குலாம் ஜிலானியின் சகோதரர் மொரிஃபாத் கத்ரி தி வயர் தளத்திடம் கூறுகையில் குலாம் ஜிலானியின் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக இருமுறை போலீஸை சந்தித்திருக்கிறார் . பிறகு எப்படி அவர் இத்தனை வருடங்களும் தலைமறைவாகி இருந்தார் என்று போலீஸ் கூறுகிறது ? மேலும் அவர் தினமும் அலுவலகம் சென்று வந்துக் கொண்டிருந்தார் என்றார்.   

மேலும் அவரை துன்புறுத்துவதற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நள்ளிரவில் அவரது வீடு சோதனையிடப்பட்டது. சட்டத்துக்கு புறம்பாக நடந்த இந்தக் கைதுக்கு  வலுவான காரணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. அவரை பகலில் அழைத்திருக்க வேண்டியதுதானே என்றும் காஷ்மீர் பத்திரிகையாளர்களை துன்புறுத்துவது தொடர்ந்து நடக்கும் என்றும் குலாம் ஜீலானியின் சகோதரர் மொரிஃபாத் கத்ரி கூறினார். 

குலாம் ஜீலானியின் கைது காஷ்மீர் பத்திரிகையாளர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய கைது அதிர்ச்சியளிக்கிறது. அவர் சட்டத்தை மதிக்கும் குடிமகன் அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்திருக்கலாம். அவர் 20 வருடங்களுக்கும் மேலாக எடிட்டராக இருக்கிறார். ஶ்ரீநகரில் இருக்கும் அலுவலகத்தில் 15 மணி நேரம் வேலை செய்யும் குலாம் ஜீலானியை தலைமறைவாகிவிட்டார் என்று எவ்வாறு கூறமுடியும் என்று காஷ்மீர் எடிட்டர்ஸ் கில்ட் கேள்வி எழுப்பியுள்ளது. 

பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல், பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் மூத்த பத்திரிகையாளரை கைது செய்திருக்கிறார்கள்    என்று காஷ்மீர் பத்திரிகையாளர் குழுவும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

குலாம் ஜீலானி தினமும் அலுவலகம் சென்று வருகிறார் அவரது வீட்டில் நள்ளிரவில் சோதனை நடத்த என்ன காரணம்? 27 வருடங்களுக்குமுன் விதித்த பிடி வாரண்டுக்கு இத்தனை ஆண்டுக்கு பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்களா? என்று உழைக்கும் பத்திரிகையாளர்கள் காஷ்மீர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது . 

காஷ்மீரிலிருந்து வெளியாகும் பத்திரிகை Kashmir Observer

கண்டனம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2 ஆண்டுகளாக காஷ்மீர் பத்திரிகைகளின் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. சீனியர் எடிட்டர் சுஜாத் புகாரி கொலை செய்யப்பட்டார். பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர், பத்திரிகைகளுக்கு வரக்கூடிய விளம்பரங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது, சில பத்திரிகைகளுக்கு விளம்பரம் மொத்தமாக நிறுத்தப்பட்டது.  மீடியா கவரேஜ்களை செக்யூரிடி ஏஜன்சிகள் செய்தது என்று Kashmir Observer  –

 யின் ஆசிரியர் பக்கத்தில் எழுதியுள்ளனர். 

தற்போது இந்த மாதிரியான தாக்குதல்கள் அதிகமாகிவிட்டன,  வேண்டுமென்றே இந்தத் தாக்குதல்களை நடத்துகிறார்கள்  என்றும் ஆசிரியர் பக்கத்தில் எழுதியுள்ளனர். 

குலாம் ஜீலானிக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. ஆனால் அவரது கைது எல்லோருக்கும் நடுங்க வைக்கும் செய்தியையே கூறுகிறது . உள்ளூர் ஊடகங்களுக்கு விடுத்த எச்சரிக்கையாகவே இந்தக் கைது பார்க்கப்படுகிறது . 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here