தனது நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்துஅளிக்க வகை செய்யும் அரசியல்சாசனத்தின் 370வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5ஆம் தேதி ரத்து செய்வதற்கு இந்தியா எடுத்த முடிவு குறித்து, நாட்டில்மாறுபட்ட அரசியல் கருத்துகள் நிலவுகின்றன.

இந்நிலையில், அங்குள்ள கள நிலவரம் பற்றி ஆராய்வதற்காக, ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 27 எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். பின்னர், அவர்கள் பிரதமர் மோடியையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்தனர்.

4 எம்.பி.க்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பிய நிலையில், 23 எம்.பி.க்கள் நேற்று காஷ்மீருக்கு சென்றனர். பின்னர், அவர்களை ஓட்டலில் சந்தித்த பாதுகாப்பு உயர் அதிகாரிகள், காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் இதர பகுதிகளில் உள்ள நிலவரத்தை எடுத்துரைத்தனர். பொதுமக்களின் பிரதிநிதிகளும் ஐரோப்பிய எம்.பி.க்களை சந்தித்தனர்.

ஐரோப்பிய எம்.பி.க்கள் வந்த நாளிலும், காஷ்மீரில் மோதல் மற்றும் கடையடைப்பு சம்பவங்கள் நடந்தன. ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில், பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். மோதல் காரணமாக, சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.

அதே சமயத்தில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று திட்டமிட்டபடி தொடங்கின. ஆனால், தேர்வு மையத்துக்கு வெளியே மாணவர்களின் பெற்றோர் பீதியுடன் காத்திருந்தனர்.

இதற்கிடையே, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், இங்கிலாந்து லிபரல் ஜனநாயக கட்சி பிரமுகருமான கிறிஸ் டேவிஸ் என்பவர், மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Image result for Chris Davies, Member of the European Parliament for North West England

இது குறித்துப்பேசிய அவர், “காஷ்மீரை பார்வையிடும் குழுவில் எனக்கும் இந்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. காஷ்மீர் மக்களிடம் போலீஸ் துணையின்றி உரையாட வாய்ப்பு அளிக்குமாறு நான் கேட்டுக்கொண்டேன். அதற்கு இந்திய அரசு சிறிய விளக்கத்துடன், எனக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெற்றுக்கொண்டது”.

“காஷ்மீரில் நடப்பவற்றை இந்திய அரசு மூடி மறைக்கிறது. பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இதை உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என அவர் கூறினார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here