காஷ்மீரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச விசாரணைத் தேவை – ஐ.நா அறிக்கைக்கு இந்தியா மறுப்பு

0
168

காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்தும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐநா மனித உரிமை அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜூலை , 2016-ஆம் ஆண்டு முதல் 2018 ஏப்ரல் வரை காஷ்மீரில் இந்திய ராணுவம் அப்பாவி பொதுமக்களைக் கொன்றும் காயப்படுத்தியும் கடும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது ஆகவே இது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியப்பகுதி காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய இரு பகுதிகளிலும் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையை ஐநா முதல் முறையாக வெளியிட்டுள்ளது. இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடும் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படும் சட்டப் பூர்வ பாதுகாப்பு குறித்தெல்லாம் விரிவாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான சுயேட்சையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் பரிந்துரை செய்துள்ளது.

ஐநா மனித உரிமை அமைப்புத் தலைவர் , ஜூலை 2016க்குப் பிறகு காஷ்மீரில் நடந்த அப்பாவி மக்கள் படுகொலைகள் மீது விசாரணை தேவை. பெல்லட் துப்பாக்கிகள் மூலம் நிறைய மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருக்கிறது . மனித உரிமை மீறல்கள் அளவுக்கதிகமாக காஷ்மீரில் நடந்துள்ளது என்று கூறியுள்ளார் . எனவே காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்று கூறியுள்ளார் .

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐநா மனித உரிமை அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1990-ஆம் ஆண்டு சட்டம் அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்குவதால் காஷ்மீரில் மனித உரிமை மீறலில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

இந்த அறிக்கையை கண்டித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளது .

“இந்தியா இந்த அறிக்கையை நிராகரிக்கிறது. இந்த அறிக்கை ஏமாற்றமளிக்கிறது. இது முற்றிலும் தவறானது; உள்நோக்கம் கொண்டது மற்றும் தூண்டுதலின் பேரில் உருவாக்கப்பட்டது. இப்படி ஒரு அறிக்கையினை வெளியிடுவதன் பின்னுள்ள நோக்கத்தினை குறித்து நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.

இந்த அறிக்கை பெரும்பாலும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பாரபட்சமானது மற்றும் தவறான தகவல்களை பரப்பும் வகையில் அமைந்துள்ளது.

சுருக்கமாக இந்த அறிக்கையானது இந்தியாவின் இறையாண்மை மற்றும் பூகோள ஒற்றுமையை மீறும் வகையில் அமைநதுள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பாகிஸ்தான் இந்தியாவின் காஷ்மீரை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது ”

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்