காஷ்மீரில் தவறாக பயன்படுத்தப்படும் பொது பாதுகாப்புச் சட்டம் ; அரசால் தடைசெய்யப்பட்ட அம்னெஸ்டியின் அறிக்கைக் கூறுவது இதுதான்

India officials block Amnesty event in Kashmir

0
374

அம்னெஸ்டி அமைப்பு வெளியிடயிருந்த காஷ்மீரின் பொது பாதுகாப்பு சட்டம் பற்றிய அறிக்கையை வெளியிடக் கூடாது என தடை விதித்துள்ளது  அரசு . 

ஜம்மு காஷ்மீரில் தற்போது அமலில் இருக்கும் தவறாக பயன்படுத்தப்படும்  சர்ச்சைக்குரிய பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் அத்துமீறல்கள் குறித்து அறிக்கை வெளியிட, அம்னெஸ்டி அமைப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் நடக்கவிருந்த அம்னெஸ்டி அமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அனுமதி கொடுக்க மறுத்துள்ளது அரசு நிர்வாகம்.

சட்ட – ஒழுங்கு பிரச்சினையை காக்கும் பொருட்டு அனுமதியை மறுத்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் காரணம் கூறியுள்ளது. ஸ்ரீநகர் துணை ஆணையர் அலுவலகத்தைச் சேர்ந்த சில அலுவலர்கள் இதை வாய்மொழியாகக் கூறியதாக அம்னெஸ்டி அமைப்பின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த நசியா இரோம் தெரிவித்துள்ளார்.

 ஜம்மு காஷ்மீரின் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதானால் குற்றச்சாட்டும் இல்லை, விசாரணையும் இல்லை என தலைப்பிடப்பட்ட அம்னெஸ்டி அமைப்பின் அறிக்கை இணையதளத்தில் வெளியாகியுள்ளது. சட்டமே இல்லாத சட்டம் இந்த பொது பாதுகாப்புச் சட்டம்.   இந்தச்  சர்ச்சைக்குரிய பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை ஜம்மு காஷ்மீரில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என அம்னெஸ்டி வலியுறுத்தியுள்ளது.

இந்தச் சட்டம் மாநில அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே பதட்டத்தை தூண்டிக்கொண்டிருக்கிறது. இதை நிச்சயம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அம்னெஸ்டி இந்தியா அமைப்பின் தலைவர் ஆகர் பட்டேல் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைக்கும் விதமாக ஒரு நபர் நடந்துகொண்டால் அவரை இரண்டு வருடங்கள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது இந்தச் சட்டம். ஒரு நபர் பொது அமைதியை கெடுக்கும் வகையில் நடந்துகொள்வார் எனக் கருதினால் இந்தச் சட்டத்தின்படி ஓராண்டு அவரை சிறையில் வைத்திருக்க முடியும். எதற்காக கைது செய்கிறோம் என்பது குறித்து அதிகாரிகள் எந்தவித அறிக்கையும் தரத் தேவையில்லை.

2007 மற்றும் 2016-ம் ஆண்டுக்கிடையே பொதுப் பாதுகாப்பு சட்டத்தின்படி 2,400 கைதுகள் நடந்துள்ளன. இவற்றில் 58 சத்வீத  வழக்குகள் நீதிமன்றத்தில் ஒன்றுமில்லாமல் போனது . பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை. 

குழந்தைகளையும் விட்டு வைக்காத பொதுபாதுகாப்புச் சட்டம்  

அம்நெஸ்டியிந் அறிக்கையில் 17 வயது சுபைர் அஹமது ஷா கைதானது பற்றி குறப்பிடப்பட்டிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு சுபைர் அஹமது ஷா அவரது வீட்டருகில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மைனராக இருந்த போதும் அவர் மீது பொது பாதுகாப்புச் சட்டம் சுமத்தப்பட்டது.  

நான் காய்கறிகள் வாங்க வீட்டைவிட்டு வெளியே வந்தேன் என்றும் அப்போது என்னை போலீஸார் பிடித்து கடுமையாக அடித்தனர். அவர்கள் வேறு சில சிறுவர்களையும் பிடித்து வைத்திருந்தனர். எங்களை ஆடைகளைக் களையச் செய்து அடித்தனர். மிகவும்  கூனிகுறுகி போனோம் . அவர்களால் எங்களை என்ன செய்யமுடியும் என்பதைக் காட்டினார்கள் என்று சுபைர் அஹமது ஷா அம்னெஸ்டியிடம் தெரிவித்துள்ளார் .   

கல்லெறிந்தார் என்று பொது பாதுகாப்புச் சட்டம் சுபைர் அஹமது ஷா மீது பாய்ந்தது. சுபைர் அஹமது ஷா தனக்கு 17 வயது என்று போலீஸாரிடம் கூறிய போதும் 22 வயது என்று குற்ற ஆவணத்தில் பதியபட்டிருக்கிறது.  

என்னுடைய வயதை அவர்கள் கேட்ட போது நான் 17 என்று கூறி என்னுடைய அடையாள அட்டையை காட்டினேன் என்று  சுபைர் அஹமது ஷா அம்னெஸ்டியிடம் தெரிவித்துள்ளார் .   

அவருடைய குடும்பம் உயர்நீதிமன்றத்தில் அவருடைய வயதை நிரூபிக்க பள்ளிச் சான்றிதழை சமர்பித்துள்ளனர். அதன்பிறகு அவரை நவம்பர் 9 , 2016 ஆம் ஆண்டு சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தது உயர்நீதிமன்றம். பிறகு அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அவரி கைது செய்து வைத்திருந்தபோது சுபைர் அஹமது ஷா உயிழந்துள்ளார். அதுதான் . அது என்னுடைய வாழ்க்கையில் படிந்த அழிக்கமுடியாத கறை என்று சுபைர் அஹமது ஷா அம்னெஸ்டியிடம் தெரிவித்துள்ளார் .   நான் கைது செய்யப்பட்டதால் எனக்கு யாரும் வேலைத் தரவு தயாராக இல்ல்லை என்றும் தெரிவித்துள்ளார் அவர்.  

2012 – 2018-ஆம் ஆண்டு வரை இந்தச் சட்டத்தில் கைதான 210 பேரின் வழக்குகளை திறனாய்வு செய்திருக்கும் அம்னெஸ்டி, முற்றிலுமாக இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறது. கைதானவர்களுக்கு பிணை வழங்குவதை தவிர்ப்பதற்காக ஒத்த உத்தரவுகளை வழங்குவதை நீதிபதிகள் மேற்கொண்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. தலைமை ஆய்வாளரான ஸாகூர் வானி, பிணையில் வெளிவரும் வாய்ப்புள்ள நபர்களைக் கைது செய்ய இந்தச் சட்டத்தை ‘பாதுகாப்பு வளையமாக’ பயன்படுத்தியதாகக் கூறுகிறார்.

‘சட்டமில்லாத சட்டம்’ என அழைக்கும் இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என கேட்டுள்ளது அம்னெஸ்டி. சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தின் மீது இந்தியாவுக்குள்ள கடமையை இந்தச் சட்டம் மீறுகிறது எனவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதையை இந்தச் சட்டம் புறந்தள்ளுவதாகவும் அம்னெஸ்டி கண்டித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here