காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மாநிலங்களவையில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கட்கிழமை (மார்ச்.5) தொடங்கியது. முதல்நாள் அமர்விலேயே எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோன்று, மாநிலங்களவையில், பஞ்சாப் நேஷனல் வங்கி விவகாரம் தொடர்பாக காங்கிரசார் அமளியில் ஈடுபட்டனர். திமுக, அதிமுக உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அவையில் கோஷங்கள் எழுப்பினர். அதிமுக உறுப்பினர்களான மைத்ரேயன், சசிகலா புஷ்பா, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் அவைத்தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்ய நாயுடுவை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here