காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக நாடாளுமன்ற உறுப்பினரகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச்.5ஆம் தேதி தொடங்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுக, திமுக நாடாளுமன்ற உறுப்பினரகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து ஏழாவது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

tdp

அதேபோன்றும், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்