காவிரி மேலாண்மை வாரிய வழக்கை இழுத்தடிக்கும் மத்திய அரசு

0
200

காவிரி விவகாரத்தில், 5 மாநிலங்களுக்கும் உரிய காவிரி நீரை பங்கிட்டு கொடுக்கும் வகையிலான வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று (வியாழகிழமை) கோரிக்கை வைத்துள்ளது.

காவிரி விவகாரத்தில் வரைவு திட்டம் தயாராகிவிட்டதாகவும், பிரதமர், அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால், வரைவு திட்டத்தை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்க முடியவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் மூத்த வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் கூறியுள்ளார்.

அதனால் , அதனை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என்றும் மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

காவிரி இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விரிவான செயல்திட்டம் தொடர்பான வரைவை மே 3-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு அளித்திருந்தது . ஆனால், இதுவரை மத்திய அரசு வரைவு
அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய கூடுதலாக இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவில் தேர்தல் நடப்பது குறித்து எங்களுக்கு அக்கறை இல்லை, வரும் 8-ம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றூ உத்தரவிட்டது.

மேலும் காவிரி மேலாண்மை வாரிய தீர்ப்பை நடைமுறைபடுத்துவதில் இதுவரை மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை முழு அறிக்கையாக மத்திய அரசு, 8-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

மேலும் பிப்ரவரி -16-ம் தேதி உத்தரவு அடிப்படையில், ஏற்கெனவே அறிவித்தபடி உடனடியாக தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்தது. வழக்கை மே , 8-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது .

இதற்கு முன்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது . ஆனால் அதை 6 வாரங்களுக்குள் அமைக்காமல் காலம் தாழ்த்திய மத்திய அரசு 6 வது வார முடிவில் “ஸ்கீம்” என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு இழுத்தடித்தது .

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

இதையும் படியுங்கள்: உங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா?

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்