காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

0
229

500க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர் . அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையை மறித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் தஞ்சை மேல வஸ்தா சாவடியில் இருந்து புதுக்கோட்டை சாலையில் உள்ள விமானப்படைத் தளத்தை முற்றுகையிடுவதற்காக பேரணியாகச் சென்றனர்.அவர்களை போலீசார் புதுக்கோட்டை சாலை நுழைவுப் பகுதியில் தடுத்து நிறுத்தினர் .

இதையடுத்து சாலையில் தர்ணாவில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.பாதுகாக்கப்பட்ட வேளாண்மைத் தளமாக டெல்டா பகுதிகளை அறிவிக்கக் கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டக் காரர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர் .

இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்